"நாவுல வலயக் கல்வி அலுவலகம் சிங்கள, தமிழ் புத்தாண்டு - 2026 ஐக் கொண்டாடியது"
“நாவுல வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பக் மஹா உஸ்சவம் 2026’ சிங்கள, தமிழ் புத்தாண்டு விழா அண்மையில் நாவுல பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் பலவற்றுடன் இடம்பெற்ற இவ்விழாவில், அலுவலக ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடனும் தோழமையுடனும் கொண்டாடினர்.”